முக்கிய செய்தி
மீன் விலையில் மிகப்பெரிய மாற்றம்
காலநிலை மற்றும் அதிக மழை காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சூழவுள்ள சூறாவளி நிலை காரணமாக மீன்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தையின் செயலாளர் என்.ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.பேலியகொடை மீன் சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 400 தொன் மீன்கள் வந்தாலும், இந்த நாட்களில் 100 தொன்களுக்கும் குறைவான மீன்களே கிடைக்கின்றன எனவும், இதனால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பேலியகொடை மீன் சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவு 30 நிமிடங்களில் தீர்ந்துவிடும் எனவும், மீன் தட்டுப்பாடு காரணமாக பேலியகொடையில் இருந்து மீன்களை எடுத்துச் செல்லும் 50 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய மீன் கடைகள் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் அண்மையில் உருவான சூறாவளி வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் சூறாவளியை உருவாகியுள்ளது. கடலின் சீற்றம் காரணமாக படகுகளில் மீன்பிடிக்க செல்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . 50 முதல் 100 அடி உயரத்தில் கடல் அலைகள் இருப்பதால் படகுகள் செல்வதில் சிரமம் இருப்பதாகவும் மீன் தட்டுப்பாடு காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மீன்களின் விலைகள் ஒரு கிலோ சராசரியாக 1500- 3500 ரூபா வரை அதிகரித்துள்ளது.