முக்கிய செய்தி
பிணையில் வந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்தே அவர் செய்யப்பட்டார்.இந்நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07) மாலை 5.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதித்தது.இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் அவரது கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களால் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.