முக்கிய செய்தி
உலக வாகன சந்தை: சீனா ஜப்பானை முந்தியது!
ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.இக்காலப்பகுதியில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகமாகும் என பிபிசி தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் ஜப்பானின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 954,185 ஆக உள்ளது.மின்சார கார்களுக்கான தேவை மற்றும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதால் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின்படி, ஜேர்மனியின் 2.6 மில்லியன் வாகன ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் சீனா 3.2 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.