உள்நாட்டு செய்தி
பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
ஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயதான மாணவர் ஒருவருக்கு கடந்த 22ம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் கல்வி பயின்ற 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.