முக்கிய செய்தி
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் அறிவிப்பு
சீனாவும் இலங்கையும் தற்போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்தை தொடர்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வழமையான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களை தாம் மீண்டும் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.