Connect with us

முக்கிய செய்தி

வெலிகம  – பெலென பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Published

on

வெலிகம  – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல் வெலிகம – பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்துடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய அவர்களின் உறவினர் ஒருவர், முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஒருவனும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளான்.ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெலிகம – பெலியான, மோதரவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.விபத்து தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.