முக்கிய செய்தி
அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது – வசந்த கரன்னாகொட
தாமும் தமது குடும்பத்தினரும், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர், திடீரென அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எடுத்தமை தமக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பிற விசாரணைகள் தமக்கு எதிராக தடையை விதிக்க காரணங்கள் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பரிந்துரைப்பது முறையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.