முக்கிய செய்தி
மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல் !
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழமையை போன்று இன்று அலுவலகத்தை திறக்க முயற்சித்த வேளையில் மறைந்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.தப்பிச்சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.