முக்கிய செய்தி
தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளுக்கு உரிமம் வழங்க நிலையான நடைமுறை இல்லை: ஊடக அமைச்சர்
அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறை கேள்விக்குரியது என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.25 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் 51 வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் முறையான நடைமுறைகள் இல்லாததன் விளைவாகவே அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.அமைச்சர் கருணாதிலக்க அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிலையான நடைமுறையை அறிமுகப்படுத்த முயற்சித்தார், ஆனால் அவர் வெற்றிபெறவில்லை, ”என்று அமைச்சர் மேலும் கூறினார்.மேலும், புதிய மின்னணு ஒலிபரப்பு ஆணைய சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தை தயாரிப்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இறுதி வரைபைத் தயாரிப்பதற்கு முன்னர் அரசாங்கம் ஊடக நிறுவனங்களுடன் உரையாடலை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.