உள்நாட்டு செய்தி
ஹொரணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலை

ஹொரணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலையில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
தற்போது வெலிகடை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகளுக்காக குறித்த சிறைச்சாலை அமைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹொரணை பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்ட குறித்த புதிய சிறைச்சாலையின் கட்டுமானப்பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட நீதி அமைச்சர அலி சப்ரி இதனை தெரிவித்தார்.