பொழுதுபோக்கு
ரிதியாகம கேசராவின் மரணத்திற்கான காரணம் வெளியானது !
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த “கேசரா” என்ற சிங்கம் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சிங்கத்தின் திசுக்கள் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.கேசரா என்ற சிங்கம் இறக்கும் போது அதற்கு நான்கரை வயது.கேசரா பிறக்கும்போது உடல் நலம் குன்றியிருந்ததால், சஃபாரி பூங்கா ஊழியர்கள் அவருக்கு போத்தல் மூலம் பாலூட்டினர்.ரிதியாகமா சஃபாரி பூங்காவில் கேசராவுடன் இருபது சிங்கங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை குட்டிகள் ஆகும் .
Continue Reading