உள்நாட்டு செய்தி
கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டை விட:ட வெளியேறிய நிலையில்; வீட்டின் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று புதன்கிழமை (20) கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த இடத்திற்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகழள மேற்கொண்டு வருகின்றனர்.