உள்நாட்டு செய்தி
வாசுவுக்கும் கொவிட்
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் அண்மைய பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கிம் ஆகியோர் தொற்றுக்குள்கினர்.
அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.