உள்நாட்டு செய்தி
இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான நினைவுக்கல் நாட்டப்பட்டது

யாழ்.பல்கலைகழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான நினைவுக்கல் இன்று (11) காலை மீள நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
அத்துடன் அங்கு இடம்பெற்று வந்த உண்ணாவிரத போராட்டமும் இன்று அதிகாலை 3 மணிக்கு யாழ்.பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசா தலைமையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் பல்லைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டு நினைதூபி உடைக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் முன்னாள் நினைவுக் கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது
உண்ணாவிரத போராட்டத்தில் 9 மாணவர்கள் ஈடுப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.
எவ்வாறாயினும் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.