முக்கிய செய்தி
பேருந்து ஓட்டியதால் தலைவர் ஆக முடியாது- சஜித்தை சரமாரியாக தாக்கிய பொன்சேகா
பஸ்களை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“பேருந்து ஓட்டுவது ஒரு தலைவராக இருப்பதற்கான தகுதி அல்ல. ஒரு பேருந்தை பரிசளித்து ஓட்டிச் செல்வதன் மூலம் அவர் ஓரளவு மனநிறைவைப் பெற்றிருக்க வேண்டும். பேருந்துகளை ஓட்டுவதற்கு நீங்கள் தலைவராக இருக்க முடியாது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பதால் நீங்கள் தலைவர்களாக இருக்க முடியாது.
அவை நாட்டின் அரசியல் கலாசாரத்துக்கு ஏற்ற விஷயங்கள் அல்ல, இந்த அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதற்கு இந்த பாரம்பரிய அமைப்பில் இருந்து அரசியல் கலாசாரம் மாற வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.