முக்கிய செய்தி
மின்சார சபையிடம் கம்பிகள், மீட்டர்கள், பற்றாக்குறை
மின் மீட்டர் மற்றும் கம்பிகள் பற்றாக்குறையால் மின்சார சபை சுமார் 35000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியாத நிலையில் உள்ளது.
இதன் மேலதிக பொது முகாமையாளர் தெரிவிக்கையில், ‘மீட்டர் கம்பிகள் மட்டுமின்றி, மின் மாற்றிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடுகளைங ஏற்பட்டுள்ளன என்றார். 300 முதல் 400 மின்மாற்றிகள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது கிட்டத்தட்ட 100 மின்மாற்றிகள் மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதுடன் இம்மாதம் ஆறாயிரம் மின்மாற்றிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக மின்சார சபையின் தலைவர் குறிப்பிடுகின்றார்.