உள்நாட்டு செய்தி
இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம சேவகர் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று நகர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01 கிராம சேவகர் பிரிவு, ஒலுவில் 02 கிராம சேவகர் பிரிவு மற்றும் அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8 இன் கீழ் 01 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 08 இன் கீழ் 03 கிராம சேவகர் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று 09 கிராம சேவகர் பிரிவு என்பனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளதிபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று காலை ஐந்து மணி முதல் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கண்டி – பூஜாபிட்டிய பொலிப் பிரிவுக்கு உட்பட்ட பமுனகம திவனவத்த கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளதிபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஹலியகொடை பொலிப் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.