உள்நாட்டு செய்தி
ஐ.நா அதிர்ச்சி அறிக்கை
பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.
குறு மற்றும் சிறு அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆணையத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகத்தின் தலைவர் மிகிகோ டனாகா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவுடன் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே மிகிகோ டனாகா இதனைத் தெரிவித்துள்ளார்.