Connect with us

உள்நாட்டு செய்தி

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை

Published

on

தேர்தல் முறையில் பல திருத்தங்கள்

• உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை
• தேர்தல்களுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பில் வரையறை
• அரசியல் கட்சி விதிகள் தொடர்பில் கவனம்
• உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் தொடர்பில் புதிய விதிகள் பாராளுமன்றத்தில் முன்வைப்பு
• அரசியல் கட்சிகள், போராட்டத்தின் பக்கம் சாய்ந்தாலும், போராட்டம், அரசியல் கட்சிகளின் பக்கம் சாயவில்லை.

பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.