உள்நாட்டு செய்தி
மஹர மோதல் குறித்த தற்போதைய நிலை

மஹர சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் இன்று பிற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி தலைமையில் இந்த குழு நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை மோதல் இடம்பெற்றதுடன் அதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மோதலில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உயிரிழந்த மேற்குறித்த நால்வரில் மூவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.