உள்நாட்டு செய்தி
நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது.
இந்நீரினை வெளியேற்றுவதற்காக 06.09.2022 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.