Connect with us

உள்நாட்டு செய்தி

முன்னாள் ஜனாதிபதிக்கு வெலகம ஆலோசனை

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்   தலைமையகம் பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ளது.

சிறந்த சமூகத்தை உருவாக்கும் கட்சியை ஸ்தாபிப்பதே தமது  நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம  இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறந்த அரசியல்  தலைவர்களை உருவாக்குவதே தமது எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றயவர்களின் ஏமாற்று கதைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அரசியலுக்கு மாத்திரம் வர வேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கேட்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.