Connect with us

உள்நாட்டு செய்தி

குரங்கம்மை – WHO வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

Published

on

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதுவரை உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் கூடுதலான குரங்கம்மை பாதிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 78 நாடுகள் அடங்கும். இந்த பாதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும் மற்றும் 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.