Connect with us

உள்நாட்டு செய்தி

ஜூலை 1 தொடக்கம் இன்று வரையில் 6 ஆயிரத்து 697 டெங்கு நோயாளர்கள்

Published

on

நாடு முழுவதிலும் 65 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய பிரிவுகளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார்.

இதில் கொழும்பு மாவட்டத்தில் 17 MOH பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 13 MOH பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 6 MOH பிரிவுகளும் , கண்டி மாவட்டத்தில் 6 MOH பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இரண்டு MOH பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தில் இரண்டு MOH பிரிவுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஒரு MOH பிரிவும், யாழ்ப்பாண மாவட்டத்தில்  இரண்டு MOH பிரிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒரு MOH பிரிவும், புத்தளம் மாவட்டத்தில் 3 MOH பிரிவுகளும் , குருநாகல் மாவட்டத்தில் ஒரு MOH பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6 MOH பிரிவுகளும் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 05 MOH பிரிவுகளும் டெங்கு பரவும் அபாய பிரதேசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 1 தொடக்கம் இன்று வரையில் 6 ஆயிரத்து 697 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டொக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருட ஆரம்பம் முதல் நாடு முழுவதிலும் இருந்து 42 ஆயிரத்து 121 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 52.6 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.