Sports
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா உலக சாதனை
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் புரோட் வீசிய வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
புரோட் வீசிய 83 ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து ´வைட்´ முறையில் 5 ஓட்டங்களை பெற்றுத்தந்தது.
´நோபால்´லாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ´ஹெட்ரிக்´ பவுண்டரி விளாசினார்.
5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ஓட்டங்கள் விளாசப்பட்டது.
கடந்த 2003ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் பீட்டர்சன் பந்து வீச்சில், ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் விளாசினார் பிரைன் லாரா.
அந்த சாதனையை பெய்லி (ஆஸி 2013) மற்றும் கேசவ் மகாராஜ் (தெ.ஆ – 2020) சமன் செய்தார்களே தவிர யாரும் முறியடிக்கவில்லை.
இந்நிலையில், புரோட்டின் ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், 19 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத லாராவின் சாதனையை, கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.