Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்

Published

on

சிலர் அத்தியாவசிய சேவையெனத் தெரிவித்து போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சிக்கும் ,மோசடி சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை,அம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய சேவை என்பதனால் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்  மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எரிபொருளை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று (21) பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.