Connect with us

உள்நாட்டு செய்தி

நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது

Published

on

மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.

அந்த உரையின் ஊடாகவே பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

(எரிப்பொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களின் களைப்பை, சிரமத்தை நாம் அறிவோம். பொருட்களின் விலையெற்றத்தால் துன்பப்படும் மக்களின் வேதனையை அறிவோம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் தற்போதைய நெருக்கடியை தீர்க்க வருமாறு அழைப்பு விடுத்தோம். அவர்கள் வரவில்லை. யார் அந்த பொறுப்பை ஏற்காவிடினும் அதிகாரத்தில் உள்ள கட்சி என்ற வகையில் நாம் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றோம்.எனவே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம். ஜனநாயகத்திற்கு அமையவே செயற்படுகின்றோம் இப்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் அறிவோம். அவ்வாறான பயங்கரமான அனுபவத்தை வரலாற்றை பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியை நிவர்த்திக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சிரத்தையுடன் செயற்படுகின்றது. ஒவ்வொரு நிமிடத்தையும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே செலவிடுகின்றோம். பிள்ளைகளே, உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது)