உலகம்
பாகிஸ்தானின் பிரதமர் ஆசனத்தில் அமர போவது யார்?

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் செரிப் விரைவில் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தெரிவுச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதால் இம்ரான் கானின் அரசு கவிழ்ந்துள்ளது.
அதாவது 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் பதவியிழந்தமை குறிப்பிடதக்கது.