உலகம்
போரை தற்காலிகமாக நிறுத்த ரஷ்யா முடிவு
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வௌியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.