உலகம்
11 ஆவது நாளாக இன்றும் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்?
மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா நேற்று அறிவித்திருந்தது.
ஆனால், இந்த போர் நிறுத்தம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
உக்ரைன் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அதன்படி 11 ஆவது நாளாக இன்றும் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
போரை உடனடியாக நிறுத்தக்கோரி சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.