உலகம்
நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயார்-உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ் ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தலைநகர் கிவ் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளை நமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.
நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம். நாம் இந்த போரை நிறுத்த வேண்டும். நாம் அமைதியாக வாழலாம்’ என்றார்.