Connect with us

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை: உக்ரைன் முழுவதும் பதட்டம்

Published

on

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகள் விதிப்போம் என்றும் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு நேட்டோ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன் பெரும் சேதம் ஏற்படும் என ரஷ்யாவுக்கு நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை குவித்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.

கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகிறது.

இதனிடையே ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனிலிருந்து செயல்படும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் ரஷிய ராணுவம் முழு அளவில் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷியா விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய தரப்பில் கூறியதாவது: உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீசப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று

இதனால் உக்ரைன் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.

உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் போரில் குதிக்கும் சூழல் நிலவுவதால் சண்டை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.