Connect with us

உலகம்

ரஷியா போரை நிறுத்தி சமாதான தீர்வை நாட வேண்டும்

Published

on

ரஷியா போரை நிறுத்தி, தூதரக ரீதியில் சமாதான தீர்வை நாட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.

இதேவேளை, உக்ரைன் போர், தனது பதவிக்காலத்தில் நடந்த சோகமான ஒரு நிகழ்வு என ஐ.நா. பொதுச் செயலாளர் எண்டனியோ குட்டரெஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று (24) இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

‘ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இது மிகவும் சோகமான தருணம் என்பேன். எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து இதனை கூறுகிறேன். சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என புட்டினிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, டான்பாஸ்சில் இராணுவ நடவடிக்கையை புடின் அறிவித்து விட்டார். ஆகவே இது மிகவும் சோகமான தருணம்.’ என்றார்.