Sports
IOC அதிரடி
ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன .
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளதாவது :
ரஷ்ய மற்றும் பெலாரஷிய அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும்.