உலகம்
போர் பதற்றம்: தேசிய அவசரகால நிலை பிரகடனம் செய்த உக்ரைன்

ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசரகால நிலையை உக்ரைன் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதற்கான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார்.
அதில் அந்த 2 பிராந்தியங்களிலும் ரஷிய படைகள் அமைதிக்காக்கும் பணிகளில் ஈடுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார்.
இதனால் போர் பதற்றம் அறிவித்துள்ளது.
மேலும் தலைநகர் கீவில் உள்ள ரஷிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.