Sports
பிரன்டன் டெய்லருக்கு 3½ ஆண்டு தடை..!
சூதாட்டத்தில் ஈடுபட அணுகியதை காலதாமதமாக தெரிவித்ததற்காக சிம்பாப்வே முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லருக்கு 3½ ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரன்டன் டெய்லர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் உடனடியாக தெரிவிக்கவில்லை என்றும் 3 மாதம் கழித்து ICC யிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தான் ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபட்டதில்லை எனவும் எனினும் சூதாட்டத்தில் ஈடுபடும்படி அணுகியதை உடனடியாக தெரிவிக்காதது தவறு என அவர் ஒப்புக்கொண்டார்.
இதனால் தனக்கு அளிக்கும் தண்டனையை ஏற்க தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரன்டன் டெய்லர் மீதான சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. அவர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 3½ ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
அத்துடன் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதற்காக அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி பிரன்டன் டெய்லரின் தடை காலம் 2025 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான பிரன்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட், 205 ஒருநாள் மற்றும் 45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.