ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்துள்ளதாக...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்குரிய ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16) காலை பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால்...
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையல் இன்று (16) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி...
அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். எரிப்பொருள் விலை உயர்வு குறித்து கடந்த 4 மாதங்களாக கலந்துரையாடி வருவதாகவும் அதற்கமையவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் நாளை (16) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்கி நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக நாடு திறக்கப்படுமா? என்பது தற்போதைய நிலைகளை ஆய்வுசெய்து ஜூன் மாதம் 19 அல்லது 20 ஆம்திகதியளவிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை...
பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை...
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில் இன்றைய தினம் காலை (15) உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என...