உள்நாட்டு செய்தி
மேலும் 59 கொரோனா மரணங்கள்
நாட்டில் மேலும் 59 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (30) அறிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 517,199 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457,488 ஆக அதிகரித்துள்ளது.