உள்நாட்டு செய்தி
சீனி இறக்குமதியினை மீண்டும் அனுமதிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்
வெள்ளை சீனி இறக்குமதியினை மீண்டும் அனுமதிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வெள்ளை சீனி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் முதல் குறித்த அனுமதி பத்திரங்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.