உள்நாட்டு செய்தி
பொருளாதார ஸ்தீரதன்மையை உறுதிபடுத்துவதனைஇலக்காக கொண்ட வழிகாட்டல் கோவை
இலங்கையின் பேரின பொருளாதாரத்தில் நிதியியல் முறைமையில் நிலையான உறுதிபாட்டை பேணும் வகையில் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான வழிகாட்டல்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
மத்தியில் வங்கியில் வைத்து இன்றைய தினம் அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆறு மாதங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை தளம்பல் அற்ற வகையில் பேணுவதற்கும் பொருளாதாரத்தின் ஸ்தீரதன்மையை உறுதிபடுத்துவதனையும் இலக்காக கொண்டு இந்த வழிகாட்டல் கோவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் தற்போது வெளிநாட்டு ஒதுக்கங்கள் 5 பில்லியன்களாக கணகக்கிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கு ஜனாதிபதி செயலணி தமது அர்பணிப்புக்களை தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வதியாதோர் வெளிநாட்டு நாணய மாற்று கணக்கு மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று கணக்கு ஆகியனவற்றில் எவ்வித மாற்றங்களும் இந்த வழிகாட்டல் கட்டமைப்பு அறிக்கையின் வாயிலாக மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் அளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அத்தியாவசியமற்ற அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட உத்தரவாத தொகை கோரிக்கை இன்று முதல் இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இறக்குமதியாளர்கள் எமது நாட்டு பொருளாதாரம் தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.