நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் ஒரு மணிநேர மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை கூறுகின்றது....
துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக வைத்தியர் பிரசாந்த ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவராக கடமையாற்றியுள்ளார்.
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத்...
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். அவர் இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றினார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா...
இந்தியாவில் ஒமைக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிற்கும் பரீட்சை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 22 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையடைந்துள்ளது. இரு அணிகளுக்கும்...
ஆளுங்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (18) முற்பகல் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்ததன் பின்னர்...
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.