உள்நாட்டு செய்தி
மாணவி கொலை: தீவிர விசாரணை

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார்தெரிவித்தனர்.
பதுளை − ஹாலிஎல உடுவர தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவி நேற்று (08) பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டிருந்தார்.
உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.