உலகம்
உக்ரைனில் இருந்து 1,000 கி.மீ. பயணித்து அண்டை நாட்டை அடைந்த 11 வயது சிறுவன்

உக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 1,000 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார்.
அந்த சிறுவன் ரயிலில் பயணித்தும், நடத்தும் என பல்வேறு நபர்களின் உதவியுடனும் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் தனியாக பயணித்து நேற்று ஸ்லொவாகியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.
ஸ்லொவாகியாவுக்குள் நுழைந்த அந்த சிறுவனை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
மேலும், தனது மகனை வரவேற்ற ஸ்லொவாகியா அதிகாரிகளுக்கு சிறுவனின் தாய் நன்றி தெரிவித்துள்ளார்.