அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) முதல் 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளன. வட் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்கள் பின்வருமாறு, தசுன் ஷானக (தலைவர்)பெத்தும் நிஸ்ஸங்கதனுஷ்க குணதிலக்ககுசல் மென்டிஸ்சரித் அசலங்கபானுக ராஜபக்சநுவனிந்து பெர்னாண்டோலஹிரு மதுஷங்கவனிந்து ஹசரங்கசாமிக்க கருணாரத்னதுஷ்மந்த சமீரகசுன் ராஜிதநுவன் துஷாரமதீஷ பத்திரனரமேஷ் மென்டிஸ்பிரவீன்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம்...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் 2019 ஒக்டோபர் முதல்...
சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 96 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை...
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய முன் தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி...