உள்நாட்டு செய்தி
உண்மையை வெளியிட்டார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய முன் தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முன் தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பசில் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து வந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.