உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 65 இலட்சத்து 90 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 இ லட்சத்து 39 ஆயிரத்து 280 பேர்...
இலங்கையின் முக்கிய பிரமுகர்களுடனான இருதரப்பு ஈடுபாடுகளைத் தொடர் இந்து, இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 5 ஆந் திகதி நிறைவு செய்தார். இந்த 3 நாள் விஜயத்தின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா சந்தித்தார். மாண்புமிகு பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட 4 அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைப்பதற்கான மெய்நிகர் ரீதியான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம், வடமராட்சி மகளிர் கல்லூரியில் ஒரு கேட்போர் கூடம், மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் காலி மாவட்டங்களில் 1,035 கிராமசக்தி வீடுகள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் மெனிக் பண்ணையில் 24 வீடுகள் ஆகிய கட்டுமானங்களை உள்ளடக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்தில், வெளிநாட்டு அமைச்சர், கல்வி அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த அங்குரார்ப்பண வைபவத்தில், மக்களுக்கிடையிலான இணைப்புக்கள் எமது உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாவதுடன், அதன் விளைவாக 2021 அக்டோபர் 20ஆந் திகதி இடம்பெறவிருக்கும் குஷிநகருக்கான முதலாவது பௌத்த யாத்திரிகர்களின் விமானமானது, இந்தியா – இலங்கை உறவுகளில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடனான பௌத்த இணைப்பு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது சிறந்ததொரு வாய்ப்பாகும் என வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளருக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2021 அக்டோபர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றதுடன், இதில் இரு நாடுகளும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ...
நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,142 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் 04...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, காலி, களுத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி...
ஊவாவில் உள்ள தரம் 1 முதல் 5 வரையான 200 மாணவர்களுக்கும் குறைந்த 434 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திறப்பதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸாமில் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில்...
நாட்டில் 200 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட மாகாண பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ‘இருதரப்பு முடிவுகள் தொடர்பில் இரு நாடுகளின் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்…’...
இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.’ – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04)மாலை...
இலங்கை அணிக்கு மஹேல ஜயலர்தன ஆலோசகராக வருவதில் அணிக்கு பெருமை என அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். அதேபோல் ஓமான் வீரர்களின் பலம், பலயீனம் தொடர்பில் வீடியோக்களை பார்த்து தெளிவடைய எண்ணியள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அல்லது உறவினர்களுக்கு 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இழப்பீட்டுத் திட்டம், மாநில...