உள்நாட்டு செய்தி
சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த இராணுவத்தினரை பாதுகாப்பது தமது கடமை

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு இடமளிக்க போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சந்தஹிரு செய விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சமய வழிப்பாடுகளின் பின்னர் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் மீண்டும் மரண பீதியில் வாழ சந்தர்ப்பம் உருவாக போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டில் இராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாது போனால் தேசிய பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
எனவே சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த இராணுவத்தினரை பாதுகாப்பது தமது கடமை எனவும் பிரதமர் மேலும் கூறினார்.