ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (22) உரையாற்றவுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இந்த கூட்டதொடர் ஆரம்பமானது. நியூயோர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கு முன்னர்...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு அமெரிக்க ஜனாதிபதி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது. எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை...
ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டியை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தமாக வரவேற்றார் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐ.நா. குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கினார். உலக சுகாதார தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளையும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகளையும் அவர் மேமலும் பாராட்டினார். அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கினார். ஐ.நா.வுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023- 2027 ன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். இது 2030 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிய ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் இறுதி சுழற்சியாகும். அமைதி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளின் அனைத்து அம்சங்களிலும் நாட்டிற்கான ஐ.நா. குழுவின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாட்டு அமைச்சு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்பதால், பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். தப்பிச்செல்லாத மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பரவலாக அச்சம் நிலவி...
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச தலையீடு அவசியம் என ஐ.நா. பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் நேற்று (16) இடம்பெற்ற ஆப்கான் நிலைமை குறித்த கலந்துரையாடலில் அவர்...
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி...
ஐக்கிய நாடுகள் சபையின் 9 ஆவது பொதுச் செயலாளராக 72 வயதான என்டனியோ குட்டரெஸ் தெரிவாகியுள்ளார். அதற்கமைய அவரின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31...
இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற்று மக்களோடு சேர்ந்து செழிப்பாக வளர்ந்து...