உள்நாட்டு செய்தி
மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ரவிநாத் ஆரியசிங்க அண்மையில் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.