உள்நாட்டு செய்தி
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை
ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (22) உரையாற்றவுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இந்த கூட்டதொடர் ஆரம்பமானது.
நியூயோர் நகர நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ள அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
“கொவிட் 19 தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் நேற்றைய கூட்டத்தொடர் ஆரம்பமானது.
ஆரம்ப கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…
ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம் என உரையாற்றியிருந்தார்.
எதிர்காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.